Take a fresh look at your lifestyle.

கவர்ச்சி உடை விமர்சனம்; ஐஸ்வர்யா லட்சுமி காட்டமான பதில்

133

கவர்ச்சி உடை விமர்சனம்; ஐஸ்வர்யா லட்சுமி காட்டமான பதில்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் சென்னையில் நடந்த தனியார் விழாவில் பங்கேற்றபோது அணிந்து வந்திருந்த ஆடை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.பொது விழாக்களுக்கு இப்படியா வருவது? குளியலறையில் இருந்து அப்படியே வந்து விட்டாரா? என பல்வேறு விமர்சனங்கள் ஐஸ்வர்யா லட்சுமிக்கு எதிராக எழுந்தது.
இது குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறியது, ‘நான் சமூக வலைதளங்களில் இல்லாததால் அன்றைய வீடியோக்களையும், விமர்சனங்க ளையும் பார்க்கவில்லை.எனக்கு பிடித்ததை நான் அணிவதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? முந்தைய நாள் ஆக்‌ஷன் படப் பிடிப்பினால் நான் மிகவும் சோர்வாக இருந்தேன்.தூக்கம் இல்லாமல் இருந்ததால் அதிகம் யோசிக்காமல் அந்த ஆடையை அணிந்தேன்.நான் வெளியே வந்த போது ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். அதைப்பற்றி அதிகம் நான் யோசிக்க வில்லை என்றார்.