‘நாடியா’ வாக கலக்கும் கியாரா அத்வானி
நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படம், 2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில்,கியாரா அத்வானி ‘நாடியா’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இது, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இதில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் உருவாக்கியுள்ள கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
