மதுரையில் வந்து இறங்கிய கருப்பு
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மே 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(26 ஆம் தேதி) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது.சூர்யாவின் பக்கா கமர்சியல் படமாக இது இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Prev Post
Next Post