Take a fresh look at your lifestyle.

நாளை ஜெயிலர் 2 ஆடியோ ரிலீஸ்

1

நாளை ஜெயிலர் 2 ஆடியோ ரிலீஸ்
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள “ஜெயிலர் 2” படம் அக்டோபர் 15ல் ரிலீஸ் ஆகிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடக்கப்போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் 2 பட பாடல்கள் வெளியீட்டு விழா நாளை 30ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டூடியோவில் இந்த விழா நடக்கிறது. அந்த விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வராகி உள்ளதால் ஜெயிலர்2 பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.