Take a fresh look at your lifestyle.

கருப்பு விமர்சனம்

84

கருப்பு விமர்சனம்
தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து சென்னை வரும் பெரியவரிடம் இருந்த 60 பவுன் நகை திருடு போய் விடுகிறது. அதன் பின்னர் நகையை மீட்க போலீஸ், கோர்ட்டில் அவதிப்பட்டு, ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்து கோர்ட்டு வளாகத்தில் கருப்பசாமி சிலைக்கு மிளகாய் அரைத்து பூசி கதறி அழுதவுடன், கருப்பசாமி சூர்யா களம் இறங்குகிறார் அதன் பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் மீதி கதை.
கடவுளே வந்தாலும் கோர்ட்டில் காசு இல்லாமல் எதுவும் நடக்காது என்ற ஒரு வரி கதையை, அழகான திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படி படத்தை இயக்கியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. கருப்பசாமியாக சூர்யா கலக்கல் நடிப்பை கொடுத்துள்ளார். வக்கீலாக வரும் த்ரிஷா நடிப்பு சிறப்பு. கொடுமையான வக்கீலாக ஆர்.ஜே பாலாஜி சிறப்பாக நடித்துள்ளார்.சுவாசிகா,
ஷிவதா,ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி, தீபா சங்கர் என அனைவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு, சாய் அபயங்கரின் இசை படத்திற்கு பலம்.