விஷ்ணு விஷால் குழந்தைக்கு பெயர் சூட்டிய அமீர்கான்
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை
ஜுவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்தார். 4 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அமீர்கானின் அறிவுரையின் பேரில் மும்பையில் சிகிச்சை பெற்று தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐதராபாத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டு
விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் அமீர்கான் கலந்துகொண்டு குழந்தைக்கு மீரா என பெயர் சூட்டினார். இந்த விழாவில் விஷ்ணு விஷாலுக்கு முதல் மனைவி மூலம் பிறந்த ஆர்யனும் பங்கேற்றார்.
Prev Post