பொங்கலன்று அஜித் படத்தின் அப்டேட்
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் 64வது படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க இருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளி யாகவில்லை.இந்நிலையில் வரும் 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் அஜித் 64 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை பெப்ரவரி முதல் வாரத்தில் துவங்கவும் திட்டமிட்டுள்ள னர். இதனிடையே ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் பந்தயம் குறித்த ஆவணப்படம் உருவாகி உள்ள நிலையில்,அந்த படத்தை அஜித்தின் பிறந்த நாளான வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
Prev Post
