Take a fresh look at your lifestyle.

மலையாள இயக்குனரை மணந்த நடிகை ரவீணா ரவி

76

மலையாள இயக்குனரை மணந்த நடிகை ரவீணா ரவி
பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி, நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் பின்​னணி குரல் கொடுத்து வரு​கிறார்.’ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறிமுகமான இவர், தொடர்ந்​து, ‘ராக்​கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்​னன்’ உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளார். இவர், தேவன் ஜெயக்​கு​மார் இயக்​கிய ‘வாலாட்​டி’ என்ற மலையாளப் படத்​தில் டப்​பிங் பேசி​னார். அப்​போது இரு​வருக்​கும் இடையே காதல் மலர்ந்​தது. இதை 2024ம் ஆண்டு அக்​டோபரில் இரு​வரும் உறு​திப்​படுத்​தினர். இந்நிலையில், ரவீணா ரவி – தேவன் ஜெயக்​கு​மார் திரு​மணம் நேற்று முன்தினம் நடந்​தது. அவர்​கள் திரு​மணத்​துக்கு திரை பிரபலங்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.