மகிழ்ச்சியில் நடிகை ரஜிஷா விஜயன்
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதைத் தொடர்ந்து சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படத்திலும் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சர்தார் 2 மற்றும் துருவ் விக்ரம் உடன் ‘பைசன் காளமாடன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் இந்த வருடம் தமிழில் இரண்டு, மலையாளத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‘களம் காவல்’ மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘கட்டாளன்’ படத்திலும் ஹீரோயினாக நடிக்க ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கை நிறைய படங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.


