Take a fresh look at your lifestyle.

கிரைம் திரில்லர் படத்துக்கு கதை எழுதி உள்ள நடிகர் தமன்

76

கிரைம் திரில்லர் படத்துக்கு கதை எழுதி உள்ள நடிகர் தமன்
ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.இந்தப் படத்தை பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி கபிர்தாஸ் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்கும் தமன் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.விரைவில் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது.