Take a fresh look at your lifestyle.

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் படம் ‘கெவி’

104

மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் படம் ‘கெவி’
இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதவன், நடிகை ஷீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கெவி’.ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இதில் ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.பாலசுப்பிரமணியன்,
சா.ராஜா ரவிவர்மா இசையமைத்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.