Take a fresh look at your lifestyle.

தனுஷ் பிறந்தநாள் பரிசாக புதுப்பேட்டை படம் ரீ ரிலீஸ்

115

தனுஷ் பிறந்தநாள் பரிசாக புதுப்பேட்டை படம் ரீ ரிலீஸ்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. கேங்ஸ்டர் படமாக வெளியான இதில் சோனியா அகர்வால், சினேகா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 19 வருடங்களுக்குப் பிறகு புதுப்பேட்டை படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு டிஜிட்டலில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.