Take a fresh look at your lifestyle.

சிவராஜ்குமார் வெளியிட்ட ‘ஏழுமலை’ பட டைட்டில் டீசர்

86

சிவராஜ்குமார் வெளியிட்ட ‘ஏழுமலை’ பட டைட்டில் டீசர்
தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை சிவராஜ்குமார் வெளியிட்டு, படக்குழுவுக்குத் வாழ்த்து தெரிவித்தார். காதல் கதையாக உருவாகும் இதில்,கன்னட நடிகை ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா மற்றும் ‘மகாநதி’ புகழ் பிரியங்கா ஆச்சார் ஆகியோர் சேர்ந்து நடிக்கின்றனர். இதில் ஜகபதி பாபு, நாகபரணா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா ஆகியோர் நடித்துள்ளனர். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய,டி.இமான் இசையமைக் கிறார்.இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.