வாத்தி நடிகையின் அடுத்த படம் (அ)
விஜய் சேதுபதிக்கு ஜோடியான சம்யுக்தா
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்த வாத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சம்யுக்தா கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே இதில் தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய படமாக இது உருவாகிறது.


