ரஜினி சந்தித்த டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்
சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.இந்த படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் படத்தையும், இயக்குனர் அபிஷனையும் பாராட்டினர். ரஜினிகாந்த், ராஜமவுலி, நானி, சுதீப் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் நானியை நேரில் சந்தித்ததை பதிவு செய்த அபிஷன், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தது குறித்து பதிவு செய்துள்ளார். தான் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்த காரணத்தை நிறைவானதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Prev Post