Take a fresh look at your lifestyle.

காதல், கவிதை-யை அறிமுகப்படுத்திய சினேகன்

106

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன், சின்னத்திரை நடிகை கன்னிகா வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு கவித்துவமாக காதல் மற்றும் கவிதை என பெயர் வைத்துள்ள சினேகன், அவர்களை முதல்முறையாக வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். இதற்காக பிரத்தியேக போட்டோ ஷூட் நடத்தி வந்த புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா-விக்னேஷ் தம்பதியின் குழந்தைகளுக்கு உயிர் , உலகு என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.