Take a fresh look at your lifestyle.

மகாத்மா காந்தி பிறந்தநாள் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

2

மகாத்மா காந்தி பிறந்தநாள் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, டெல்லி ஆளுநர் தரன்ஜித் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். இதனிடையே மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மகாத்மா காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சத்தியம், அகிம்சை, கருணை மற்றும் சேவை ஆகியவற்றின் ஒளிவிளக்காக திகழ்கிறது. இது ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து விளங்கும்.எல்லா உயிர்களிடமும் பகையற்றவராகவும், நட்புணர்வும் கருணையும் கொண்டவராகவும் இருப்பவர்; ‘எனது’ என்ற பற்றும் அகந்தையும் இல்லாதவர்; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்; பொறுமை கொண்டவர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.