Take a fresh look at your lifestyle.

ஏழுகடல் ஏழுமலை படத்தின் கதை இதுதான்!

2

ஏழுகடல் ஏழுமலை படத்தின் கதை இதுதான்!
ராம் இயக்கியுள்ள படம் “ஏழு கடல் ஏழு மலை” . இதில் நிவின் பாலி சூரி அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் எலி ஒன்றும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 1ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் கதை பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளன. 8 ஆயிரம் ஆண்டு வாழும் நிவின்பாலி ஒரு பெண்ணை பல காலம் தேடுகிறார். ஒரு தீபாவளி நாளில் ரயிலில் தூக்கத்தில் இருக்கும் போது கனவில் அந்த பெண்ணை சந்திக்கிறார். அப்போது வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் சூரி அவரை எழுப்ப என்ன நடக்கிறது? அந்த பெண் அஞ்சலி யார்? நிவின் பாலி, சூரி இடையில் ஒரு எலி என்ன செய்கிறது என்பது கதையாம். ராம் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.