ஷூட்டிங் துவங்கும் முன்னே பிசினஸ் ஆன அஜித் படம்-
குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரேவ் ஹாட்ஸ் புரொடக்சன் சார்பில் அவரது மனைவி ஷாலினி தயாரிக்கிறார். டேர் டெவில் என பேரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. அதற்குள் இந்த படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை ஆகியவற்றை 180 கோடி ஒரு பிரபல நிறுவனம் வாங்கியு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் அஜித்தின் கார்பந்தயம் தொடர்பாக உருவாகியுள்ள மற்றொரு படமான கிளாடியேட்டர் படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
Next Post