மகளுடன் இணைந்து நடிக்கும் ஊர்வசி
தென்னிந்திய அளவில் குணச்சித்திர மற்றும் காமெடி கேரக்டர்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி.இந்நிலையில் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமியும் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்த அவர் தற்போது, கன்னடத்திலும் தடம் பதித்து ஹீரோயின் ஆக புதிய படமொன்றில் நடிக்கிறார். புல்லி என்ற டார்க் காமெடி படத்தில் புவன் பொன்னண் ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் ஒரு ஹைலைட்டாக ஊர்வசியும் இந்த படத்தில் நடிக்கிறார். தாயும் மகளும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
Prev Post
Next Post