சூர்யா 49 பட இயக்குனர் இவர்தான்!
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இயக்கிய எச் வினோத், அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் தனுஷ் வேறு சில படங்களில் தற்போது பிஸியாக இருப்பதால், வினோத் இயக்கும் படத்தில் நடிப்பதை தள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஒரு கதையை எச் வினோத் எழுதி முடித்துள்ளார். அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துள்ளதால் தனது 49 வது படத்தை இயக்கும் பொறுப்பை எச் வினோத்திடம் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த படத்தை ட்ரீம் வாரியாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சூர்யா தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தனது 48வது படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்க துவங்குகிறார்.
Prev Post