மீண்டும் டேக் ஆப் ஆகும் மோகன்லாலின் ராம்
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் தயாரான ராம் படம் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் அப்படியே பாதியில் உள்ளது. தற்போது அந்தப் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து மற்றும் மொராக்கோ முழுவதும் படமாக்கப்பட்ட இந்தப் படம் விபத்து மற்றும் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்தப் படத்தை தொடங்க ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் களமிறங்குவதாகப் பரவிய செய்திகளுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறியது, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி இடமிருந்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வராத நிலையில், நிறுத்தப்பட்ட ‘ராம்’ படத்தை ஒரு புதிய நிறுவனம் கையகப்படுத் துவது குறித்த பேச்சு தனக்கு ஆச்சரியமளிப் பதாக உள்ளது என்றார்.
Prev Post
Next Post