Take a fresh look at your lifestyle.

முதல்வர் விஜய் நண்பர் சஞ்சீவ் பதில்

48

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? முதல்வர் விஜய் நண்பர் சஞ்சீவ் பதில்
சென்னை மே 24:
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடு வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் அந்த நேரம் வரும் போது பார்க்கலாம் என கூறியுள்ளார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் நடைபெற்ற தளபதி விஜய் டூ முதல்வர் விஜய் என்ற கண்காட்சியை தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் விஜய்யின் உருவங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் சிற்பங்களாக மாணவர்கள் உருவாக்கியிருந்தனர்.

அவற்றை பார்வையிட்ட நடிகர் சஞ்சீவ், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேள்வி : உங்களுக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கோ, ராஜ்யசபா எம்.பி. பதவியை உங்கள் நண்பர் முதல் அமைச்சர் விஜய் கொடுத்தால் வாங்கி கொள்வீர்களா?

பதில் : ‘டக்கென’ பெரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். அந்த சூழ்நிலையை பொறுத்து அது இருக்கிறது.  இப்போது அதை பற்றி நான்யோசிக்கவில்லை. அந்த நேரம் வரும் போது பார்ப்போம்.

கேள்வி : முதலமைச்சர் விஜய் வராத நிகழ்ச்சிகளில் உங்களை இனி பார்க்கலாமா?
பதில் : ‘அய்யய்யோ…’ யார் அந்த பெரிய மனுஷன்…? ஒரேயடியாக 35 வருட நட்பையே காலி பண்ணிருவீங்க போல. அவர் வராத நிகழ்ச்சிக்களுக்கெல்லாம் என்னால் போக முடியாது. என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தால் நான் போவேன். பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க.சும்மா இருங்க சார்..
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட திறந்து வைத்த நடிகர் சஞ்சீவிக்கு சென்னைஸ் அமிர்தா கல்வி குழும தலைவர் பூமிநாதன் நினைவு பரிசை வழங்கினார்.