Take a fresh look at your lifestyle.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான புதிய அமைச்சரவை

49

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, இன்று தலைமைச் செயலகத்தில் (கோட்டையில்) தனது அரசுப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவருக்கு நேரில் சென்று தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாகத் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களும், சமூக வலைத்தளங்களில் திமுக-விசிக நிர்வாகிகள் இடையே கடுமையான சொற்போர்களும் அனல் பறந்து வரும் வேளையில், தங்களின் கொள்கைத் தோழர் வன்னியரசு கோட்டையில் அமைச்சராக அமர்ந்து மக்கள் பணியைத் தொடங்கியுள்ள தருணத்தை விசிக தலைவர் நேரில் வாழ்த்திக் கொண்டாடியுள்ளார்