Take a fresh look at your lifestyle.

சினிமா, குடும்பம் இரண்டையும் சமமாக பார்க்கிறேன்: ஜோதிகா

55

சினிமா, குடும்பம் இரண்டையும் சமமாக பார்க்கிறேன்: ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யா, ஜோதிகா தங்களது மகன், மகளுடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கூட குடும்பத்தை பார்ப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். தீவிர சினிமா பணிகளுக்கி டையே தனது குடும்பத்தை எப்படி சமன் செய்து கொள்கிறோம் என்பது குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில், இந்த காலத்தில் திருமணம் என்பது இருவரும் சமநிலை என நான் நினைக்கிறேன். சூர்யா எனக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்ல நான் படப்பிடிப்புக்கு வெளியூர் செல்லும் போது அவர் வீட்டிற்கு வந்து விடுவார். சூர்யா ஷூட்டிங்கிற்க்கு செல்லும் போது வீட்டின் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். குழந்தைகளுடன் எங்களில் ஒருவர் எப்போதும் வீட்டில் இருப்போம் என்றார்.