Take a fresh look at your lifestyle.

மதுரையில் சேயோன் பட ஷூட்டிங்

88

மதுரையில் சேயோன் பட ஷூட்டிங்
தாய்க்கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’. இதில் ஹீரோயினாக பாக்கியஸ்ரீ போஸ் நடிக்கிறார். கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் படமாக உருவாகும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ஷூட்டிங் மதுரையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.