Take a fresh look at your lifestyle.

கேன்ஸ் விழாவில் கல்யாணி பிரியதர்ஷன்

75

கேன்ஸ் விழாவில் கல்யாணி பிரியதர்ஷன்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ‘லோகா சேப்டர் 1’ படத்துக்கு பிறகு சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து லோகா படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முதலாக பங்கேற்றுள்ளார். விழாவில் பங்கேற்க சிவப்பு கம்பளத்தில் அவர் நடந்து வந்த போது 100-க்கணக்கான கேமிரா மேன்களின் மின்னல் போன்ற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ணை பறித்தது. கல்யாணி பிரியதர்ஷன் நடந்து வந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கேன்ஸ் விழாவில் கல்யாணி பிரியதர்ஷன் பங்கேற்றது சர்வதேச மேடைகளில் தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் பிரபலங்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.