Take a fresh look at your lifestyle.

மகளுக்கு மியூ என பெயர் சூட்டிய அட்லீ, ப்ரியா தம்பதி

83

மகளுக்கு மியூ என பெயர் சூட்டிய அட்லீ, ப்ரியா தம்பதி
பிரபல இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஹாலிவுட் தரத்திற்கு உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து நேற்று அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் அந்த குழந்தையின் பெயரை சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளனர்.மகளுக்கு மியூ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், மியூ என்றால் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மீர் என்ற மகன் இருக்கிறான்.