சிலந்தி 2 பட ஹீரோயின் ஆனார் மாளவிகா மேனன்
தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் படம் என்ற பெயருடன் வெளியாகி வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி.கம்பெனி சார்பில் சங்கர் பழனிசாமி தயாரிக்க, ஆதிராஜன் இயக்கி இருந்தார். தற்போது சிலந்தி-2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் அதிக பட்ஜெட்டில் திரில்லர் படமாக உருவாகிறது. இதில் மாளவிகா மேனன் லீடு கேரக்டரில் நடிக்கிறார். மேலும் பல மொழிகளிலிருந்து முன்னணி நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.லோகா மற்றும் காந்தாரா பட ஸ்டைலில் உருவாகும் இதில் 30 நிமிடங்களுக்கு மேல் உள்ளது.
Next Post