Take a fresh look at your lifestyle.

முருகனைப் போற்றும் ‘தமிழ் கடவுள்’ ஆல்பம்

2

முருகனைப் போற்றும் ‘தமிழ் கடவுள்’ ஆல்பம்
பொதுவாக ஆல்பம் பாடல்கள் என்றால் காதல் பாடல்களே உருவாக்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் முருகனை பற்றிய பாடலான தமிழ் கடவுள் என்ற ஆல்பம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சூரஜ் குமார் புரொடக்ஷன்ஸ் சார்பில், நடிகர் சூரஜ் குமார் நடித்து இந்தப் பக்திப்பாடலை தயாரிக்கிறார்.இவருடன் எஸ் 4 ஸ்டுடியோஸ் சார்பில் சதிஷ் குமார்.சி இணைந்து தயாரி க்கிறார்.இப்பாடலை விஜய் கிரண் இயக்கு வதோடு,ஓளிப்பதிவும் செய்திருக்கிறார். சென்னை. மற்றும் வேலூரில் இந்தத் தமிழ்கடவுள் பாடலுக்குப் படப்பதிவு செய்து வருகின்றனர்.சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவான இந்தப் பாடல் , காலம் கடந்தும் பேசப்படும் முருகப்பெருமான் பாடல்கள் வரிசையில் சேரும் என்கின்றனர் படக் குழுவினர்.