பாரதி வரிகளில் ஜெய் பட பாடல்
நடிகர் ஜெய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியாரின் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வரிகளை கொண்டு மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணி யுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழுவை சேர்ந்த சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள் ளார். முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.வரும் மே மாதம் படம் வெளியாக உள்ளது.
Next Post