கவர்ச்சி ஆடை விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நிதி அகர்வால்
நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த திராஜா சாப் பட விழாவில் பங்கேற்று திரும்பியபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி, பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகைகள் வெளியில் வரும் போது கண்ணியமாக ஆடை அணிந்து வர வேண்டும் என பேசினார்.அவரது கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து,அவர் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் தனது கருத்தில் இருந்து மாறப் போவதில்லை. நிதி அகர்வால் சம்பவத்திற்கு பிறகு நடிகைகள் ஆடை பற்றி தனக்கு பேச தோன்றியதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு இதுவரை கருத்து தெரிவிக்காத நிதிஅகர்வால் தற்போது தனது கவர்ச்சி உடை பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்துள்ளார். அவரது பதிவில், இதில் ‘பாதிக்கப்பட்டவரையே குறை கூறுவது பெரிய சூழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
Prev Post
Next Post