Take a fresh look at your lifestyle.

‘ சிக்மா’ படத்தின் ஷூட்டிங் கை முடித்த ஜேசன் சஞ்சய்

172

‘ சிக்மா’ படத்தின் ஷூட்டிங் கை முடித்த ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் வரும் 23, அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், ஜேசன் சஞ்சய் திட்டமிட்டபடி ஷூட்டிங் முழுவதையும் முடித்துக் கொடுத்தது அவரது திறமையை காட்டுகிறது.படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால் அதற்கு முன்பு முடித்துவிட்டார் என்றார்.