Take a fresh look at your lifestyle.

1960ஐ கண் முன் நிறுத்தும் பராசக்தி உலகம்

203

1960ஐ கண் முன் நிறுத்தும் பராசக்தி உலகம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி.இது அவரின் 25-வது படமாகும். இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்க, வில்லன் கேரக்டரில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இது அவரது 100-வது படமாகும். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஸ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி படத்தை வெளியிடுகிறார்.

1960 காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இதற்காக அந்த கால பொருட்கள் படத்தில் பயன்படுத்தியுள்ள னர்.இதை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பராசக்தி உலகம் என்ற பெயரில் வள்ளுவர் கூட்டத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த காலத்து ரெயில்,தபால் நிலையம், போலீஸ் நிலையம், டூரிங் டாக்கீஸ் மற்றும் குதிரை வண்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.