Take a fresh look at your lifestyle.

வரும் 21ல் ‘தீயவர் குலை நடுங்க’ படம் ரிலீஸ்

32

வரும் 21ல் ‘தீயவர் குலை நடுங்க’ படம் ரிலீஸ்
அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’. இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் 21-ம் வெளியாகிறது.இந்த திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.