Take a fresh look at your lifestyle.

இந்தியன் பனோரமாவுக்கு தேர்வான ஆநிரை குறும்படம்

139

இந்தியன் பனோரமாவுக்கு தேர்வான ஆநிரை குறும்படம்
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது.இதில் இயக்குனர், நடிகர் இ.வி.கணேஷ்பாபு இயக்கியுள்ள ஆநிரை குறும்படம் தேர்வாகி இருக்கிறது.
இப்படம் பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியது, பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ஆநிரை.
இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி என்றார். இந்த குறும்படத்தில் இ.வி.கணேஷ்பாபு அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி,மீரா, கௌரிசங்கர், காமாட்சி சுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு செல்லத்துரை ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.