கும்கி-2 ஷூட்டிங்: காட்டில் நடந்தை சொன்ன பிரபு சாலமன்
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் கும்கி 2. படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில்,
இயக்குனர் பிரபு சாலமன் பேசிது, இந்தப் படத்தின் சூட்டிங் நெல்லையம்புதி என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரம் ஆகும். முதன் முதலில் லோகேஷன் பார்க்க போகும் போது உடலில் உள்ள உள் உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு.ஒரு டார்மென்ட்ரி குள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டா ர்கள் என ஷூட்டிங் அவஸ்தைகள் பற்றி பேசினார்.