விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில், ரித்து, அபிநயா மற்றும் பல நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த சில படங்களில் சறுக்கி வந்த விஷால் இந்த படத்தின் மூலம் ஏறுமுகத்தில் இருக்கிறார் விசாலைவிட நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் கொடிகட்டி பறக்கிறார் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் தியேட்டரில் ஆரவாரம் பல விதமான முகபாவணையில் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார் எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட் இந்த படத்திற்கு பிறகு எங்கேயோ போய்விடும் என்கிறார்கள் ரசிகர்கள் விஷாலும் விதவிதமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் மொட்டை தலையுடன் ரஜினியின் சிவாஜி படப்பாணியில் அசத்தலாக நடிப்பு வழங்கி இருக்கிறார்.
செல்வராகவன் தன் பங்குக்கு மிரட்டி இருக்கிறார் படத்தின் முக்கிய பங்கு வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் துள்ளலான இசை மிரட்டும் பின்னணி என படம் முழுவதும் தன் இசையால் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார் ஜீவி. சரி வாங்க இந்த படத்தின் கதை என்ன பார்க்கலாம் விஞ்ஞானியான.
சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.
படத்தின் வித்தியாசம் டைம் ட்ராவல் தான் அதை எல்லா விதத்திலும் முழுமையாக பயன்படுத்தி முழு என்டர்டைன்மென்ட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் இடைவேளையின் போது எதிர்பாராத டிவிஸ்ட் கொடுத்து படத்தின் திசையை திருப்புகிறார் எந்தெந்த வகையில் வெற்றிக்கு மெனக்கெட்டு மூலையை கசக்கிப் பிழிந்து காட்சி அமைப்புக்கு கவனம் கொடுக்க முடியுமோ அவ்வளவு தந்து இருக்கிறார் இயக்குனர்.
படத்தை பொறுத்தவரை முதல் பாதியில், கதை கொஞ்சம் கூட ஒன்றாமல் எங்கேயோ போவது போன்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது. அதில் வரும் டைம் ட்ராவல் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கங்கே வரும் சில காட்சிகள் இரண்டாம் பாதியில், ‘ரசிகர்களுக்கு சம்பவம் காத்துக் கொண்டு இருக்குது’ என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. அதற்கு ஏற்றவாறு, இண்டர்வெல் காட்சியில்தான் படக்கதை தீயாய் பற்ற ஆரம்பிக்கிறது.
அதன் பின் வரும் இரண்டாம் பாதி, மார்க் ஆண்டனியின் ரெட்ரோ வைப்பிற்குள் ரசிகர்களை கொண்டு சென்று கொண்டாட வைக்கிறது. இரண்டாம் பாதையில் ஆண்டனியின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது கருப்பணசாமியாக ஆட்டம் மகனுக்காக கண்ணீர் விட்டு அழுவதும் துரோகம் செய்த நண்பனை முதுகில் குத்தாதே என்பதும் செம நடிப்பு தீனி வழங்கி இருக்கிறார் விசால்
தி ஓவரால் கேங்க்ஸ்டர் எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார் என்பதற்காகவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. வழக்கம் போல் இவர் அரக்கத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, டைமிங் காமெடி, கதாபாத்திரங்களுக்கு இடையே காட்டும் வித்தியாசம் என அனைத்து வகையிலும் ஸ்கோர் செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாதான் இப்படத்தை நிலைநிறுத்தும் மாபெரும் தூண் என்று சொல்லலாம். அவரின் ஸ்கீரின் பிரசன்ஸிற்காகவே இப்படத்தை காணலாம். எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு நடிகர் திலகம் பாலையா எம் ஆர் ராதா போன்ற பழைய நடிகர்களின் உணர்ச்சி குவியலாக இருக்கிறது மனுசன் என்னம்மா பின்னி எடுத்திருக்கிறார்.
கமல் விக்ரம் இவர்கள்தான் கெட்டப்புக்கு பேர் போனவர்கள் ஆனால் விதவிதமான கெட்டப்புகளில் விதவிதமான ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கில் அவர் வரும் பொழுது விசில் சத்தம் காதை பிழக்கிறது சிலுக்கை பார்த்து வாய் பிளந்து நிற்பதும் அவர் ஆடும் ஆட்டமும் துள்ளலாய் இருக்கிறது அப்பா மகன் இரு வேடங்களில் அப்பா வேடத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் அவர் பேசும் டயலாக் டெலிவரி அவ்வளவு ரசிக்க வைக்கிறது இந்த படத்திற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு விருது நிச்சயம் காத்திருக்கிறது
அதேசமயம் ஹீரோவான விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட இரு கதாபாத்திரங்களுக்கு சற்று வித்தியாசத்தை காட்டி இருக்கிறார் இதில் நடித்த செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர். சில்க் ஸ்மித்தாவாக நடித்த விஷ்ணு காந்தி பிரியா கொஞ்சம் நேரம் மட்டும் வந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இனி நிறைய படங்களில் இவரை பார்க்கலாம்.
தெலுங்கு நடிகர் சுனில் பாபு சூப்பரான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஜெயலரை தொடர்ந்து இப்படத்திலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம்
படத்தில் வெறும் மூன்றே மூன்று மூன்றும் ஆட்டம் போட வைக்கும் அசத்தல் பாடல்கள் “வருது வருது விலகு விலகு”, “அடியே மனம் நில்லுனா நிக்காதடி”, “கண்னை நம்பாதே”, “பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி” ஆகிய பழைய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. பழைய பாடல்களை சூப்பராக ரீமேக் செய்து, படத்திற்கு தனி வைப்பை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் மனுஷன்
சிறப்பாக பணியாற்றிய டெக்னிக்கல் குழு
டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒளிப்பதிவு தொடங்கி படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதற்கு முன்பு மூன்று படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனின் கேரியரில் இப்படம் மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர் எழுதிய வசனங்களும் காமெடி காட்சிகளும் விசில் சத்தத்தை குவித்தது.
ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பெயரில் இயக்குனர் இருப்பதால் இந்த படத்திற்காக நிறைய மனக்கட்டு இருக்கிறார் அந்த வகையில் இவருக்கு வெற்றி படமாக அமைந்திருக்கிறது
படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?
முதல் பாதியை பொறுமை என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய்
செய்து ரசிக்கலாம். டைம் மிஷின் தொடர்பான காட்சிகளை இன்னும் கண்களுக்குள் நிற்கிறது ஆகமொத்தம், படம் பெயர்தான் மார்க் ஆண்டனி. ஆனால் ஸ்கோர் செய்தது அப்பனும் மகனுமான ஜாக்கியும் மதனும்தான்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களின் கதைகள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததோடு, குடும்பத்தோடு காண முடியாத நிலையும் இருந்தது. ஆனால் இந்த முறை தன் மீதான குற்றச்சாட்டை போக்க குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்த விடுமுறையை கொண்டாடும் வகையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வழங்கியுள்ளார் ஆதிக்.
இந்த படத்தை குடும்பத்தோடு ரசிக்கலாம் இளைஞர்கள் தனியாக ரசிக்கலாம் காதலியோடு சென்று ரசிக்கலாம் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு போவதற்கு இந்த படம் மிகவும் உதவும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மூன்று மொழியில் உருவாகி இருக்கும் இந்த படம் எல்லா ஏரியாவிலும் ஹிட் அடிக்கும் முதல் நாள் கலெக்ஷனை எகிரி உள்ளது போட்டிக்கு சரியான படம் இல்லை என்பதாலும் மார்க் ஆண்டனி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.