புதுச்சேரி;
தேர்தல் புறக்கணிப்பு; ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் எச்சரிக்கை
ஜிப்மர் மருத்துவமனையில் 547 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்
சுமார் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த வரும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர்
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை
ஊழியர்களை 90 நாட்களுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நிர்வாகம் மேல்முறையீடு செய்ததால் ஊழியர்கள் கொந்தளிப்பு
ஜிப்மர் இயக்குநர் அலுவலகத்தை சுமார் 300கும் மேற்பட்ட ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பணி நிரந்தரம் செய்யாவிட்டால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை குடும்பத்துடன் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்