இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குறித்து CPI(M) அரசியல் தலைமைக்குழுவின் கருத்து:
மதமாற்றம் செய்தவுடன் சாதி ஒடுக்குமுறை மறைந்து விடும் எனக் கருதுவது, பட்டியல் சமூக மக்களின் வாழ்வியலிலுள்ள நிதர்சன பிரச்சனைகளை மறுக்கும் ஆபத்தான புரிதலாகும்.
பட்டியல் சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, மதத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று ஒடுக்குமுறையும், சமூக-பொருளாதார பின்தங்கிய நிலையும் தான் அதன் அடிப்படை. இந்த அடிப்படையை புறக்கணித்து, மத அடையாளத்தை முன்னிறுத்தும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சமூகநீதி கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும். எனவே, இந்த தீர்ப்பு அரசியலமைப்பு அமர்வில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று CPI(M) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.