Take a fresh look at your lifestyle.

மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போட்ட பிரஜின்

4

மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போட்ட பிரஜின்
சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அந்தரன்’.ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் ஆகியோருடன் தயாரிப்பாளர் மு.கி.சாம்ப சிவமும் நடித்துள்ளார். இது குறித்து இயக்குநர் சந்தோஷ் ராவணன் கூறியது,”ஒரு இளம் பெண்ணை சுற்றி பல்வேறு மர்ம நிகழ்வுகள் நடக்கின்றன.அதற்கு என்ன காரணம், இவற்றுக்கு பின்னால் உள்ளவர் யார் என்பதை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் பிரஜின் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹரி எஸ். ஆர். இசை அமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அந்தரன் என்பதற்கு இன்னொரு பொருள் வேடன்.