தமிழ் சினிமாவில் நடித்தது பெருமை: கெட்டிகா சர்மா

தமிழ் சினிமாவில் நடித்தது பெருமை: கெட்டிகா சர்மா
தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான கெட்டிகா சர்மா, ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு-2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘ஆரா பத்துக்கு பத்து…’ என்ற பாடலுக்கு அவர் போட்ட நடன அசைவுகள் பெரியளவில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.இளம்பெண்கள் ஏராளமானோர் அந்த ‘ஸ்டெப்’களை போட்டு ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த கெட்டிகா சர்மா,”தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமைக் குரியவர்கள். மொழி பாகுபாடு பார்க்காமல், திறமையான அத்தனை கலைஞர்களையும் கொண்டாடி தீர்ப்பதில் வல்லவர்கள். தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம்”என்றார்.

Comments (0)
Add Comment