அனிருத்தின் அரவிந்த் ஆல்பம் டீசர்!:

அனிருத்தின் அரவிந்த் ஆல்பம் டீசர்!:
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார் .கமர்சியல் படங்களுக்கான பின்னணி இசையை வடிவமைப்பதில் அனிருத்தை அடித்துக்கொள்ளவே முடியாது என்கிற அளவிற்குக் கடந்த சில ஆண்டாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.தற்போது, அரவிந்த் என்கிற ஆல்பத்தை அனிருத் உருவாக்கி யுள்ளார். இதன் டீசரை நேற்று முன்தினம் வெளியிட்டு, நேற்று (ஜூன் 14) மாலை அரவிந்த்தைச் சந்திக்கலாம் எனக் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள், இசைக் கச்சேரிகளுக்கு இடையே ஆல்பம்களிலும் அனிருத் கவனம் செலுத்தி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Comments (0)
Add Comment