டியூட் படம் மாதிரி ஜாலியான படம் எடுக்க ஆசை: அட்லி தகவல்

டியூட் படம் மாதிரி ஜாலியான படம் எடுக்க ஆசை: அட்லி தகவல்
அட்லி தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த “பத்தா” படம் கடந்த 1ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் நடிகை லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் பிரித்விராஜ் ஆகியோர் நடித்திருந்தன ர்.சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர், தயாரிப்பாளர் அட்லி பேசியது, ரொம்ப சிம்பிள் கதை பிடித்து இயக்குனரோட மனநிலையும் என்னுடைய மனநிலையும் சேர்ந்ததால் இந்த இயக்குனரை தேர்ந்தெடுத்தேன். ஒரு தயாரிப்பாளரா ஒரு படத்திற்கு எவ்வளவு தூரம் நிற்க வேண்டும் என்பதை நான் பீல் செய்து இருக்கிறேன். நான் தயாரிக்கிற படங்களில் நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை கற்றுகொண்டு செய்கிறேன்.நான் “ராஜா ராணி” படம் லோ பட்ஜெட்டில் தான் செய்தேன். ஹை பட்ஜெட், லோ பட்ஜெட் என்பது வியாபாரத்திற்கு தான். சிறிய படம் கதை அமைந்தால் செய்வேன். “ராஜா ராணி” மாதிரி சிறிய படம் மற்றும் “டியூட்” போன்ற சிறிய படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஹிந்திக்கும் தமிழுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஜவான் படத்தை தமிழில் தான் எழுதினேன். தற்போது ராக்கா படமத்தை எடுத்து வருகிறேன். அது முடிந்த பிறகு தான் அடுத்த படம் பற்றி யோசிப்பேன்.

Comments (0)
Add Comment