ரியோ ராஜின் ‘மேடி’ பட ஷூட்டிங் முடிந்தது

ரியோ ராஜின் ‘மேடி’ பட ஷூட்டிங் முடிந்தது
ரோல் டைம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கலையரசு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மேடி. இந்த படத்தில் ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் லீட் ரோலில் நடிக்கின்றனர். மேலும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி, கார்த்திகா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க,கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் துவக்க விழாவில் சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வேகமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment