கோட்டையை குறி வைக்கும் மலைக்கோட்டை நடிகர் அரசியல் மாநாடு போல் ரசிகர் சந்திப்பை நடத்திய சிவகார்த்திகேயன்

கோட்டையை குறி வைக்கும் மலைக்கோட்டை நடிகர் அரசியல் மாநாடு போல் ரசிகர் சந்திப்பை நடத்திய சிவகார்த்திகேயன்

சென்னை அக் 6:
சமீபகாலமாக நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் ரசிகர் சந்திப்பு நடத்தி கிடா விருந்து வைத்தார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவி பிரம்மாண்ட விழா வைத்து ரசிகர்களை உசுப்பேத்தினார். கடந்த வாரம் சூர்யாவும் தனது ரசிகர்களை சந்தித்து அறிவுரை மலை மழை பொழிந்தார். ஏற்கனவே விஜய் சேதுபதியும் ரசிகர்களை சந்தித்து கட்டியணைத்து முத்தமிட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயனும் தனது ரசிகர் சந்திப்பை ஒரு அரசியல் மாநாடு போல் நடத்தி இருக்கிறார்.

சென்னை போரூர் அருகே, பரணிபுதூரில் 2000க்கும் அதிகமான ரசிகர்மன்ற நிர்வாகிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். மினி அரசியல் மாநாடு மாதிரி நடந்த இந்த கூட்டத்தில் அனைவரும் வெள்ளை சட்டையுடன் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்த இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. வெளியிலேயே அவை பத்திரமாக வாங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ‛‛நானும், விஜய் சேதுபதியும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்து இருக்கிறோம். மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆங்கர் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்றார்கள் நான் நடிகராக ஜெயித்து இருக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க, அது நம்மளை மேம்படுத்தும். சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்கும், அது ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும். நன்றாகப் படியுங்கள், நன்றாகச் சம்பாதியுங்கள். குடும்பம்தான் முதலில் என நினைக்க வேண்டும். அதன்பிறகு தான் மற்றது எல்லாம். சேயோன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளது. ரசிகர்கள் விரும்பும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாக இது அமையும் என பேசினார்.இந்த நிகழ்ச்சி நடந்த மண்டப வளாகம் முழுவதும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் அனுமதிக்கப் பட்டனர். அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பு தற்போது பேசும் பொருளாகி உள்ளது. நிகழ்ச்சி குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், ‘நாள்தோறும் நற்பணி செய்யவேண்டும்’ என சிவகார்த்திகேயன் கூறினார். எங்களால் முடிந்த அளவுக்கு இல்லாதவர்க ளுக்கு உதவி செய்து வருகிறோம். சிவகார்த் திகேயன் கட்சி தொடங்குவதற் கான சூழல் இப்போதைக்கு இல்லை. ரசிகர்களா கிய நாங்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் விரும்பவில்லை.எதிர்காலத்தில் அப்படிப்பட்ட சூழல் அமைந்தால் அவர் என்ன கொள்கை களையும் நோக்கங்களையும் முன் வைக்கிறார் என்பதை பொறுத்து நாங்கள் ஆதரவு அளிப்போம். நற்பணி இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார் என்றார்.

Comments (0)
Add Comment