டபுள் அக்குபன்ஸி -விமர்சனம்

டபுள் அக்குபன்ஸி -விமர்சனம்
போஸ் வெங்கட் வினோதனி தம்பதிக்கு வினோதமான குழந்தை பிறக்கிறது பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் மாறும் அந்த குழந்தை வளர்ந்தவுடன் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, சென்னைக்கு வருகிறார். பகலில் பெண்ணாக உள்ள ரேஷ்மாவை, வினோத் கிசனும், இரவில் ஆணாக உள்ள சந்தோஷை, சம்யுக்தாவும் காதலிக்கின்றனர். அவர்களிடம் இந்த ரகசியத்தை எப்படி சொல்வது என இருவரும் தவிக்க, அவர்களுக்கு உண்மை தெரிந்தவுடன் என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை.ஒரே உடம்பில் ஆணும், பெண்ணும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வரி கதையுடன் பேண்டஸி, ஆக்சன் ,காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் தனது முதல் படத்திலேயே கொடுத்து இந்த தலைமுறை ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. இருப்பினும் திரைக்கதை லாஜிக் இல்லாத மேஜிக். அறிமுக ஹீரோ சந்தோஷ் மற்றும் ஹீரோயின் ரேஷ்மா வெங்கடேசன் அழகாக நடித்துள்ளனர். அதேபோல் வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தாவும் கேரக்டருக்கு சரியான சாய்ஸ். வி டிவி கணேஷ், பக்ஸ், விச்சு ஆகியோரும் கதைக்கு உதவியுள்ளனர். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு, மற்றும் சாம் சி எஸ் இசை வேற லெவல்.

Comments (0)
Add Comment