பேயாக மாறிய நயன்தாரா..!!
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் மூன்று பாகங்களும் பெரிய ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது 4-ம் பாகம் உருவாகி வருகிறது.இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். குழந்தைகளை கவரும் வகையில் பிரமிக்க வைக்கும் காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது இந்த படத்தில் நடிகை நயன்தாரா கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நயன்தாரா பேயாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘மாயா’ படத்தில் நயன்தாரா பேயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.