ஹபீபி-விமர்சனம்

ஹபீபி-விமர்சனம்
பல தலைமுறையாக நெசவுத் தொழிலை கஸ்தூரி ராஜாவின் குடும்பம் செய்து வருகிறது. விசைத்தறி காரணமாக கைத்தறித் தொழில் நலிந்து போக கஸ்தூரி ராஜாவின் தம்பி, வெளி நாட்டில் வேலைக்கு செல்கிறார். தம்பி பணம் அனுப்பினாலும் நெசவுத் தொழிலை கஸ்தூரிராஜா விட மறுக்கிறார். அடுத்ததாக அவரது மகன் ஈஷாவையும் வெளிநாட்டிற்கு அனுப்ப நினைக்கிறார்.ஆனால், வெளிநாடு சென்றால் நம் சித்தப்பாவை போல நாமும் குடும்பத்தைப் பிரிந்திருக்க நேர்ந்துவிடுமோ என்ற எண்ணத்தில் அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். அதன் பிறகு அப்பா- மகன் வாழ்க்கையில் நடந்தது என்ன என்பதே படத்தின் மீதி கதை. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதி யில் 1980களில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் இயக்குநர் மீரா கதிரவன் இப்படத்தை உருவாகியுள்ளார். கடிதம் மற்றும் ஆடியோ கேசட் மட்டுமே இருந்த அந்த காலத்தில் வெளிப்பட்ட அன்பை அழகாக திரையில் காட்டியுள்ளார். ஒரு இஸ்லாமியராகவே கஸ்தூரிராஜா வாழ்ந்துள்ளார். ஈஷா, மாளவிகா மனோஜ் தன்யா ஸ்ரீ, அனுஷியா ராஜன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசை மற்றும் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

Comments (0)
Add Comment