நிழல் – விமர்சனம்

நிழல் – விமர்சனம்
தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் விஜய் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை ஜனனி கொடூரமாக தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.தனது மகன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டு பிடிக்க விஜய் ஹரியின் தாய், காவல்துறை அதிகாரி ஒருவரை விசாரிக்க சொல்கிறார். விசாரணையில் ஜனனி வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு குற்ற செயல் நடந்ததும் தெரிய வருகிறது அது என்ன என்பதே படத்தின் மீதி கதை. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல் மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து, இயக்குனர் எ.கே. குமார் படத்தை இயக்கியுள்ளார். இருப்பினும் படம் சீரியல் பார்த்த ஃபீலிங்கை தருகிறது. பிக்பாஸ் ஜனனி டபுள் ஆக்ஷனில் சிறப்பாக நடித்துள்ளார். விசாகன் விஜய் ஹரி ரமேஷ் கண்ணா சிவன் சீனிவாசன் உள்ளிட்டோர் தங்கள் கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
அபுபக்கரின் இசை, மோகன் குமாரின் ஒளிப்பதிவு ஓகே ரகம் .

Comments (0)
Add Comment